அசத்தலான தரத்தில்.. அட்டகாசமான விலையில்..! – வருகிறது Nothing Phone 2!
இந்தியாவில் சமீபமாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நத்திங் நிறுவனம் அடுத்ததாக தனது Nothing Phone 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் விரிவடைந்ததை தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் கால்பதித்த நத்திங் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட Nothing Phone 1 நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் பல வசதிகளுடன் நத்திங் தனது Nothing Phone 2 ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.
Nothing Phone 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்;
-
6.7 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
-
120Hz ரெஃப்ரெஷ் ரேட்
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 சிப்செட்
-
ஆண்ட்ராய்டு 13
-
50 எம்பி + 50 எம்பி + 32 எம்பி ட்ரிப்பிள் கேமரா
-
32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
-
Sony IMX766 கேமரா தொழில்நுட்பம்
-
8 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்
-
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
4700 mAh பேட்டரி, 66W பாஸ்ட் சார்ஜிங்
-
50W Qi வயர்லெஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங்
இந்த Nothing Phone 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39,990 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த Nothing Phone 2 ஸ்மார்ட்போன் ஜூலை 11ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.
Edit by Prasanth.K