திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (11:30 IST)

லொஸ்லியாவை சந்திக்க இலங்கை சென்ற பிக்பாஸ் போட்டியாளர் - வைரல் புகைப்படம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி     வருகின்றனர். மேலும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் மதுமிதாவை அவரது வீட்டில் சென்று சேரன் சந்தித்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

 
பிக்பாஸ் வீட்டில் எல்லா காதலுக்கு எதிராளியாக இருந்து வந்த வனிதா லாஸ்லியா காதலுக்கு மட்டும் சப்போர்ட் செய்து வந்தார். ஆனால், லொஸ்லியா வனிதாவை பற்றி புறம் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும், லொஸ்லியாவை வனிதா விட்டுக்கொடுக்கவில்லை. காரணம், லாஸ்லியாவை பார்த்தால்  என்னுடைய தங்கச்சி ப்ரீத்தா மாதிரி இருக்குன்னு அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால் லொஸ்லியா மீது வனிதாவுக்கு ஒரு தனி பாசம் என்று கூட சொல்லலாம்.
 
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளரான வனிதா  இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சக போட்டியாளரான லொஸ்லியாவை சென்று சந்தித்து அவருடன் செல்ஃபீ  எடுத்து " என்னுடைய பிரித்தாவுடன்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் "வனிதா அக்காவுடன் கவின் சம்சாரம்" என குறிப்பிட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.