செக்யூரிட்டி என்ற பெயரில் பயனர்களை ஏமாற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

Android
Last Updated: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:34 IST)
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செக்யூரிட்டி பேட்ச் என்ற அப்டேட் வழங்குவதில் பல்வேறு நிறுவனங்கள் பயனர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.

 
ஆண்ட்ராய்டு போன்களில் அடிக்கடி அப்பேட் வருவது வழக்கமாக உள்ளது. அப்டேட் செய்வது பாதுகாப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு தொடர்பான அப்டேட் வழங்குவதில் பயனர்களை ஏமாற்றி வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
 
லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச் வழங்குவதாக கூறி வரும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜெர்மனியில் இயங்கும் SRL பாதுகாப்பு நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், பல்வேறு ஸ்மார்ட்போன்களில் Patch Gap இருப்பது தெரியவந்துள்ளது. 
 
குறிப்பாக பயனர்கள் இந்த செக்யூரிட்டி பேட்ச் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :