1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (12:42 IST)

என்ன செய்வது? இதுதான் ஒரே வழி; சோகத்தில் ஆப்பிள்

விலை மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுக செய்து வரும் சீன நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஆப்பிள் நிறுவனம் அதன் பொருட்களின் விலையை குறைக்க முன்வந்துள்ளது. 

 
ஆப்பிள் என்றே தனிச்சிறப்பு உண்டு. விலை உயர்வாக இருந்தாலும் அதை வாங்குவோர் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களில் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தின் ஆக்கிரமைப்பு அதிகரித்து விட்டது.
 
சியோமி, ஒன் பிளஸ் போன்ற சீன நிறுவனங்கள் மலிவான விலையின் சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இதனால் ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 
 
ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்புக்கு பின் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் சாதனங்களில் புதுமை என்பது காணாமல் போய்விட்டது. இதனால் ஆப்பிள் சாதனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டு வருகின்றது.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் வேறு வழியில்லாமல் விலை குறைவான சாதனங்களில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐ பாட் மலிவான விலையின் சந்தையில் விற்பையாக உள்ளது. 
 
ஆப்பிள் சாதனங்களில் இதுதான் முதன்முறையாக மலியான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், கூகிளின் க்ரோம்புக் மற்றும் அமேசானின் பையர் டேப்லெட் ஆகியவற்றுக்குக் கடுமையான பாதிப்பை உருவாக்கும் விதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.