மூத்த குடிமக்களின் ரூ. 50,000 வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை!

000 வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை!" width="740" />
Last Modified செவ்வாய், 11 டிசம்பர் 2018 (14:44 IST)
மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.


 
மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களின் வட்டி வருவாய்கு வங்கிகள் தவறாக வரிப்பிடித்தம் செய்வதாக நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.


கடந்த 6-ஆம் தேதி நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மூத்த குடிமக்களின் வட்டி வருவாய் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாத வரையில் வரி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் அதனை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :