செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:35 IST)

அண்டார்டிகா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அண்டார்டிகா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் (இன்று காலை) மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இவை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக இருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் அர்ஜென்டினாவின் டியரா டெல் பியூகோ மற்றும் சிலி நாட்டின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அங்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பூகம்பத்தின் மையப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 250  கிலோமீட்டர் தொலைவுக்கு பாதிப்பு இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து முழுவிவரம் இன்னும் வெளிவரவில்லை. பூகம்பத்தின் மையப் பகுதிக்கு அருகாமையில் பிரிஸ்டல் தீவும், தெற்கு சான்ட்விச்  தீவுகளும்தான் உள்ளன. இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இல்லை என்பதால், அதிக சேதாரம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சிலி நாட்டில் நிலநடுக்கம் வெகுவாக உணரப்பட்டுள்ளது. அதேபோல அர்ஜென்டினாவின் டியரா டெல்  பியூகோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.