வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு குதூகல செய்தி : இனி சாட்டிங் வேற லெவல்...

watsapp
Last Modified சனி, 8 டிசம்பர் 2018 (17:39 IST)
இன்றைய ஸ்மார்ட் போன்களில் பேஸ்புக் போன்றே வாட்ஸ் அப் ஒரு முக்கியமான பொழுது போக்கு அம்சமாக கருதப்படுகிறது. அதிலும் இளைஞர்களில் சாட்டிங் மெசேஜ்களுக்கு பஞ்சமே இல்லை. அளவில்லாமல் மெசேஜ் அனுப்ப முடியும் என்பதால் இதன் பயனாளர்கள் அதிகம்.
இந்நிலையில்  வாட்ஸ்அப்பில் குழுக்கள் இருந்தால், அவற்றில் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் வசதியை இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த வசதியை எப்படி பெறுவது என்றால் :
#குரூப்களில் நாம் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நபரை தேர்வு செய்து கொள்ள வேண்டும் .
 
#தேர்வு செய்த உடன் வலது மேற்பக்கத்தில் 3 டாட்கள்( புள்ளிகள் ) தோன்றும்
 
#அதில் இரண்டாவதாக உள்ள ரிப்ளை பிரைவேட்லி என்பதை தேர்வு செய்து கொள்ளவும்
 
#இதன் மூலம் பதில் மெசேஜை டைப் செய்து குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம் .

இந்த புதிய வசதியால் வாட்ஸ்அப் பயனாளிகள் மேலும் பயனடைவார்கள் என்று இந்நிறுவனம் கருதுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :