ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (16:58 IST)

தீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கேலக்ஸி எம்90

ஸ்மார்ட்போன்களிலேயே மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் நிறுவனங்களில் முக்கியமானது சாம்சங் நிறுவனம். தீபாவளியை முன்னிட்டு சாம்சங் காலக்ஸி வரிசையில் புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்.

சாம்சங் நிறுவனம் பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் அதன் விலை அனைவரும் வாங்கும்படி இல்லை என்ற கருத்து வாடிக்கையாளர்களிடையே இருந்து வந்தது. இந்த வருடம் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி ஏ மற்றும் கேலக்ஸி எம் மாடல் மொபைல்கள் வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்த்தது. மேலும் 20000 ரூபாய்க்குள் அழகான மாடல்களில் வெளியான கேலக்ஸி எம்40 மற்றும் ஏ50 ஆகிய மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு கேலக்ஸி எம்90 என்ற மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைலின் விலை 30000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளிவந்த கேலக்ஸி எம் மாடல்களை விட அப்டேட் வெர்ஷனாக வர இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.