அரை மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேல் மொபைல் விற்பனை: கலக்கிய சாம்சங் ஃபோல்ட்

Samsung Fold
Prasanth Karthick| Last Modified சனி, 5 அக்டோபர் 2019 (17:11 IST)
புதிதாக சந்தையில் அறிமுகமான சாம்சங் ஃபோல்ட் மாடல் போன்கள் விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திலேயே 1600க்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

சாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்களையும், சிறப்பம்சங்களையும் கொண்ட மொபைல் போன்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டாட மடிக்க கூடிய ஃபோல்ட் மாடல் போன்களை வெளியிட போவதாக சில மாதங்கள் முன்பே சாம்சங் நிறுவனம் அறிவித்திருந்தது.

முதல்முறையாக 12 ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகியுள்ள இந்த மொபைல் 7.3 இன்ச் நீளமும், 4.6 இன்ச் அகலமும் கொண்டது. 512 ஜிபி இண்டர்னல் மெமரி வசதி உள்ளது இதன் சிறப்பம்சம். பின்பக்கம் 16 எம்.பியில் ஒரு கேமராவும், 12 எம்பியில் இரண்டு கேமராக்களும் உள்ளன. முன்பக்கம் செல்பி எடுக்க 10 எம்பியில் கேமரா உள்ளது. இந்த கேலக்ஸி ஃபோல்ட் மொபைலின் விலை 1,64,999 ரூபாய். ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் என்பதால் இதன் விற்பனை சற்று சுணக்கமாக இருக்கும் என்றே கருதப்பட்டது.

இந்நிலையில்  முதற்கட்டமாக 1600 மொபைல்கள் ஆன்லைனில் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. விற்பனை தொடங்கி அரை மணி நேரத்திலேயே 1600 மொபைல்களும் விற்று தீர்ந்தன. இதை வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த பலர் மொபைல் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர் ஒரு யூனிட்டுக்கு 1600 மொபைல்கள் விற்பனை என சாம்சங் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது யூனிட் விற்பனை மீண்டும் டிசம்பரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :