1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (11:32 IST)

அப்படியே அதே ஃபோன்தான்.. இந்த ஒரு சிறப்பம்சம் மட்டும் கூடுதல்! – Redmi 12 5G எப்படி இருக்கு?

Redmi 12 5G
ஷாவ்மி நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் பட்ஜெட் விலை பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் ஷாவ்மி நிறுவனமும் ஒன்று. ஷாவ்மியின் புதிய Redmi 12 5G தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் வெளியான Redmi 12 ஸ்மார்ட்போனை ஒத்த சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Redmi 12 5G சிறப்பம்சங்கள்:
 
  • 6.79 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷிங் ரேட்
  • ஸ்னாப்ட்ராகன் 4 ஜென் 2
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
  • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்
  • 50 எம்.பி + 2 எம்.பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 8 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த Redmi 12 5G ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி உள்ளது. இதன் முந்தைய Redmi 12 மாடலில் 4ஜி வரை மட்டுமே உள்ளது. அதேபோல Redmi 12 மாடலில் FM Radio வசதி உள்ளது. ஆனால் இந்த Redmi 12 5G ஸ்மார்ட்போனில் FM Radio வசதி இல்லை.

இந்த Redmi 12 5G ஸ்மார்ட்போன் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் ப்ளூ, ஜேட் ப்ளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் மூன்று வேரியண்டுகளின் விலை நிலவரம்.
 
  • 4 GB + 128 GB – Rs.11,999
  • 6 GB + 128 GB – Rs.13,499
  • 8 GB + 256 GB – Rs.15,499

Edit by Prasanth.K