வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (13:25 IST)

ஒரே விலை.. சிறப்பம்சங்கள் வேற! ரியல்மி Vs iQOO! – எது வாங்கலாம்?

Narzo Vs iQOO
விவோ நிறுவனத்தின் புதிய அறிமுகமான iQOO Z7 இந்த மாதத்தில் இந்திய சந்தையில் வெளியாக உள்ள நிலையில் அதற்கு நிகரான சிறப்பம்சங்களுடன் விற்பனையாகி வரும் ரியல்மி நிறுவனத்தின் Narzo 50 Pro மாடலுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களாக ரியல்மி, விவோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன. தற்போது இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல நிறுவனங்கள் பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் Realme Narzo 50 Pro மாடலுக்கு iQOO Z7 மாடலுக்கும் இடையேயான ஒப்பீட்டை இங்கே காணலாம்.

Realme Narzo 50 Pro, iQOO Z7 இரண்டு மாடல்களுமே 5ஜி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது. இரண்டு மாடல்களிலும் 90Hz அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் முன்பக்க செல்பி கேமரா இரு மாடல்களிலும் 16 எம்.பி அளவு உள்ளன.


Realme Narzo 50 Pro மாடலானது மீடியாடெக் டைமென்சிட்டி 920 ப்ராசஸரையும், iQOO Z7 டைமென்சிட்டி 920 எஸ்.ஓ.சி சிப்செட்டையும் கொண்டுள்ளது. Realme Narzo 50 Pro வில் 48 எம்.பி தரத்தில் ட்ரிப்பிள் கேமரா உள்ளது. iQOO Z7 –ல் 64 எம்.பி ஓஐஎஸ் டூவல் கேமரா உள்ளது.

Realme Narzo 50 Pro பேட்டரி திறன் 5000 mAh ஆகவும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் உள்ளது. இதுவே iQOO Z7-ல் 4500 mAh பேட்டரியுடன், 44W ஃபாஸ் சார்ஜிங் திறன் உள்ளது.
Realme Narzo 50 Pro ஆரம்ப விலை ரூ.17,480 ஆக உள்ள நிலையில் iQOO Z7-ன் ஆரம்பவிலை ரூ.17,499 ஆக உள்ளது. இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று நிகரான சிறப்பம்சங்களுடனும், விலையுடனும் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K