வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (13:53 IST)

கட்டிங்ல இருந்து ஃபிட்டிங் வரை பண்ணும்..! – Chat GPT அடுத்த வெர்ஷன் GPT-4!

GPT 4
சமீபத்தில் வெளியான நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி பெரும் ட்ரெண்டாகியுள்ள நிலையில் அதைவிட அப்டேட்டான மைக்ரோசாப்ட்டின் ஜிபிடி-4 என்ற செயற்கை நுண்ணறிவு விரைவில் வெளியாக உள்ளது.

உலகம் முழுவதும் மெல்ல மெல்ல செயற்கை நுண்ணறிவுகளின் வருகை மற்றும் பயன்பாட்டால் பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் செயற்கை நுண்ணறிவால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படும் அதே சூழலில் நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவுகளின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. சமீபத்தில் ஓபன் ஏஐ என்ற நிறுவனம் வெளியிட்ட சாட் ஜிபிடி உலகம் முழுவதும் பெரும் வைரலாகியுள்ளது.

கோடிங், கதை, திரைக்கதை, வினாத் தாள்கள் தொடங்கி காதல் கடிதம் வரை கேட்கும் அனைத்தையும் எழுதி தரும் சாட் ஜிபிடி பலரால் அதிகமாக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக உள்ளது. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு எழுத்து வடிவ பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் வகையில் உள்ளது.


இந்நிலையில் மைக்ரோசாப்ட் Open AI நிறுவனம் சவுண்ட், வீடியோ, டிசைனிங், புகைப்படம் என மற்ற மல்டிமீடியாவையும் கையாளும் திறனோடு அப்டேட்டட் வெர்சனான ஜிபிடி-4 ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எந்த மாதிரியான இசை வேண்டும் என்று தரவுகளை அளித்தால் புதுவிதமான இசையை அதுவே கம்போஸ் செய்து தந்து விடுமாம். அதுபோல ஒரு கதையை கொடுத்து கார்ட்டூன் படமாக தயாரிக்க சொன்னால் கூட தயாரிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிபிடி 4 ன் வருகையால் தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவுகளுக்கு இடையேயான மோதல் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. அதேசமயம் இந்த செயற்கை நுண்ணறிவுகளால் பல துறையை சேர்ந்தோரும் பணி இழக்கும் ஆபத்து உள்ளதாகவும் பலர் பீதியடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K