1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 டிசம்பர் 2024 (14:49 IST)

இந்தியாவில் வெளியானது Realme 14x 5G! சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

Realme 14x 5G

பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி தனது புதிய Realme 14x 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

 

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ரியல்மி நிறுவனமும் ஒன்று. தற்போது குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் Realme 14x 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். இந்த மாடலில் இந்தியாவிலேயே முதன்முறையாக குறைந்த விலை ஸ்மார்ட்போனில் IP69 Dust, Water Resist வசதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Realme 14x 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.67 இன்ச் IPS 120Hz HD+ டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 6300 எஸ்ஓசி ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14
  • 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஹைபிரிட் மெமரி கார்டு ஸ்லாட்
  • 50 MP + 2 MP டூவல் ப்ரைமரி கேமரா
  • 8 MP முன்பக்க செல்ஃபி கேமரா
  • 6000 mAh பேட்டரி, 45W SUPERVOOC சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Realme 14x 5G ஸ்மார்ட்போன் ஜுவெல் ரெட், கிரிஸ்டல் ப்ளாக், கோல்டன் க்ளோ ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K