திங்கள், 15 ஏப்ரல் 2024
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (14:42 IST)

மிக குறைந்த பட்ஜெட் விலையில் வெளியானது POCO X6 Neo 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

Poco X6 Neo 5G
POCO ஸ்மார்ட்ஃபோன் நிறுவனத்தின் புதிய மாடலான POCO X6 Neo 5G மாடல் இந்தியாவில் இன்று முதல் விற்பனையை தொடங்குகிறது.இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய POCO X6 Neo 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

POCO X6 Neo 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
 • 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
 • 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்ப்ளிங் ரேட்
 • மீடியாடெக் டைமென்சிட்டி 6080 சிப்செட், ஆக்டாகோர் பிராசஸர்
 • ஆண்ட்ராய்டு 13
 • 8 ஜிபி / 12 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்
 • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
 • 108 எம்பி + 2 எம்பி OIS ப்ரமைரி டூவல் கேமரா
 • 16 எம்பி முன்பக்க செல்ஃபி கேமரா
 • 5ஜி, சைடு பிங்கர்ப்ரிண்ட் சென்சார்
 • 5000 mAh பேட்டரி, 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
இந்த POCO X6 Neo 5G ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் ப்ளாக், ஹாரிசன் ப்ளூ, மார்ஷியன் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் 4 வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த POCO X6 Neo 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.15,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.17,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த POCO X6 Neo 5G ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளம் மூலம் விற்பனையை தொடங்குகிறது. பழைய ஸ்மார்ட்போன்கள் மீதான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான சலுகையும் உள்ளது.

Edit by Prasanth.K