பட்ஜெட் விலையில் சலுகைகளுடன் Asus ஸ்மார்ட்போன்...

Last Updated: புதன், 25 ஏப்ரல் 2018 (11:12 IST)
Asus நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Asus Zenphone மேக்ஸ் ப்ரோ எம்1 என பெயரிடப்பட்டுள்ளது.  
 
இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுவதோடு, அறிமுக சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
 
இதன் 3 ஜிபி ராம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ராம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி  பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்கப்படுகிறது. 
 
Asus Zenphone மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:
 
# 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
# 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ராம்
# 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
# கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
அறிமுக சலுகைகள்:
 
# ரூ.3200-க்கு வோடபோன் சலுகை
# ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ஒரு வருடத்திற்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா. 
# வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள்: ரூ.399 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு. 
# வோடபோன் ரெட் ரூ.499 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ரெட் ஷீல்ட் டிவைஸ் செக்யூரிட்டி திட்டம் வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :