வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (14:08 IST)

திறந்தா 7 இன்ச்.. மடிச்சா 4 இன்ச்..! – கலக்கும் Motorola Razr 40 Series சிறப்பம்சங்கள்!

Motorola Razr 40 ultra
இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் Flip மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இந்த போட்டியில் Motorola நிறுவனமும் களமிறங்குகிறது.



இந்தியாவில் ஆரம்பத்தில் பட்டன் டைப் மொபைல்கள் புழக்கத்தில் இருந்தபோது பிரபலமாக இருந்தவை Flip மாடல் போன்கள். பின்னர் ஸ்மார்ட்போன் மோகத்தால் இந்த ஃப்ளிப் மாடல் ஃபோன்கள் மறைந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போன்களே ப்ளிப் மாடல் போன்களாக மாறத் தொடங்கியுள்ளன.

நீளமான திரைகளை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சட்டை பைகளில் வைக்க, கையில் வைத்து கொள்ள இலகுவாக இல்லாத நிலையில் அதை இரண்டாக மடித்துக் கொள்ளும் வகையில் Samsung, OPPO நிறுவனங்கள் Flip மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. அதை தொடர்ந்து தற்போது Motorola நிறுவனமும் தனது புதிய Motorola Razr 40 Series ஐ சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த Motorola Razr 40 Series விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.

இந்த Motorola Razr 40 Series-ல் Motorola Razr 40 மற்றும் Motorola Razr 40 Ultra என்ற இரண்டு மாடல் Flip ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன.

Motorola Razr 40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

Motorola Razr 40 series

  • 6.9 இன்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே
  • 1.5 இன்ச் Flip கவர் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்ட்ராகன் 7 Gen 1 சிப்செட்
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, My UX
  • 64 (OIS) + 13 MP டூவல் கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 4200 mAh பேட்டரி
  • 30W பாஸ்ட் சார்ஜ், 5W வயர்லெஸ் சார்ஜ்

சேஜ் க்ரீன், வென்னிலா க்ரீம், சம்மர் லிலாக் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும் இந்த Motorola Razr 40 ஸ்மார்ட்போன் விலை ரூ.45,999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Motorola Razr 40 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

Motorola Razr 40

  • 6.9 இன்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே
  • 3.6 இன்ச் Flip கவர் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 சிப்செட்
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, My UX
  • 12 (OIS) + 13 MP டூவல் கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 3800 mAh பேட்டரி
  • 30W பாஸ்ட் சார்ஜ், 5W வயர்லெஸ் சார்ஜ்
  •  
இன்பினிட்டி ப்ளாக், க்ளாசியர் ப்ளூ, விவா மெஜந்தா ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும் இந்த Motorola Razr 40 Ultra ஸ்மார்ட்போன் விலை ரூ.65,990 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K