திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (15:34 IST)

ரூ.999க்கு UPI வசதி கொண்ட பட்டன் ஃபோன்! – புதிய NOKIA 105 க்ளாசிக் மாடல்!

Nokia 105
பிரபலமான நோக்கியா நிறுவனம் ரூ.999 விலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனை வசதி கொண்ட பட்டன் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் பட்டன் ஃபோன் காலத்தில் இருந்தே பிரபலமாக இருந்து வரும் நிறுவனம் நோக்கியா. தற்போது பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் வெளியிட்டு வந்தாலும் தங்களது புகழ்பெற்ற பழைய க்ளாசிக் மாடல் ஃபோன்களை புதிய சிறப்பம்சங்களும் மறுவடிவம் செய்தும் வெளியிட்டு வருகிறது.

அப்படியாக பட்டன் வசதி கொண்ட ஃபோனிலேயே பணப்பரிவர்த்தனைக்கான யுபிஐ வசதியை கொண்ட புதிய NOKIA 105 மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது நோக்கியா. இன்பில்ட் யுபிஐ செயலியுடன் வெளியாகியுள்ள இந்த NOKIA 105 மாடலில் 1800mAh பேட்டரி, வயர்லெஸ் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

Charcoal மற்றும் Blue என இரண்டு வண்ணங்களில் இந்த NOKIA 105 சந்தையில் அறிமுகமாகிறது. இந்த NOKIA 105 சிங்கில் சிம், டூயல் சிம் என இரண்டு வேரியண்டுகளிலும், சார்ஜர் உடன், சார்ஜர் இல்லாமல் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.999 என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K