வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (15:17 IST)

நோக்கியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்:ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள்

பிரபல நிறுவனமான எச்.எம்.டி குளோபல் தற்போது நோக்கியா மொபைல்களில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்ஃபோன்கள் வெளியிட உள்ளன. 
எச்.எம்.டி குளோபல் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம், பல வருடங்களாக நோக்கியா என்ற பிரபல மொபைல் மாடல்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த நிறுவனம் நோக்கியாவில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்ஃபோன்கள் வெளியிட இருக்கின்றன என தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து எச்.எம்.டி. நிறுவனம் அந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களின் பெயர்களையும் வெளியிட்டு இருக்கிறது. அந்த மொபைல் மாடல்களின் பெயர்கள்  நோக்கியா 3.1ஏ மற்றும் 3.1சி என கூறப்படுகிறது.

மேலும் அந்த ஸ்மார்ட்ஃபோன்களின் சிறப்பம்சங்களையும் வெளியிட்டிருக்கிறது:

5.45 இன்ச் எச்.டி.டிஸ்ப்ளே மற்றும் 1440 x 720 பிக்சல் அமைப்புகளில் வெளியாகியுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரிகார்டு வசதியும் உள்ளது எனவும் தெரியவருகிறது.

நோக்கியா 3.1ஏ மற்றும் 3.1 சி ஆகிய மாடல்கள் “ஆண்ட்ராய்டு 9” என்ற இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

கேமரா அமைப்புகளில் 8 எம்.பி. ரியர் கேமராவும் 5 எம்.பி. செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் கை ரேகை ஸ்கேன்னர் போன்ற பல்வேறு அம்சங்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களில் 2900 எம்.ஏ.எச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜூன்14 ஆம் தேதி நோக்கியா 3.1 ஏ மற்றும் 3.1 சி ஆகிய ஸ்மார்ட்ஃபோன்கள் அமெரிக்காவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுவதாக தெரிகிறது.