அடேங்கப்பா! ஒரு வாட்ச் இவ்வளவு ரூபாயா?
உலக புகழ்பெற்ற ஃபாசில் கடிகார நிறுவனம் இந்தியாவில் சந்தையை பிடிப்பதற்காகவே பிரத்யேகமான ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
பிரபல ஆடம்பர பொருட்களுக்கு பெயர்பெற்ற நிறுவனம் ஃபாசில். என்றாலும் இந்த கம்பெனியின் கைக்கடிகாரங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. ஃபாசில் தற்போது புதிய ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கூகிள் ஓஎஸ் மென்பொருளை கொண்ட இந்த வாட்ச் 41எம்.எம் மற்றும் 43 எம்.எம் ஆகிய சைஸ்களில் கிடைக்கிறது.
புதிய தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வாட்ச்சில் இதயதுடிப்பு சென்சார். ஜிபிஎஸ், அல்டிமீட்டர், திசைக்காட்டி, வானிலை சென்சார், வெப்பநிலை சென்சார் போன்ற அமைப்புகள் உள்ளன. ப்ளூடூத் மூலம் போனை கனெக்ட் செய்துகொண்டு வாட்ச்சின் மூலம் உங்கள் போனை ஆப்ரேட் செய்யலாம். 24 மணிநேரம் உழைக்கும் பேட்டரிகள் கொண்ட இந்த வாட்சை ஆன்லைனிலும் வாங்கலாம். இதன் விலை 17,995 ரூபாய் மட்டுமே. சாம்சங் கியர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் வாட்ச்சுகளுடன் ஒப்பிடும்போது இதன் விலை மிகவும் குறைவானது. எனவே இந்தியாவில் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை மற்ற ஸ்மார்ட்வாட்ச்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.