1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. no telegram and whatsup if no sim card

சிம் கார்டை கழட்டினால் டெலிகிராம், வாட்ஸ் அப் வேலை செய்யாது!.. புதிய அறிவிப்பு..

telegram
எப்போது எல்லோர் கையிலும் செல்போன் வந்ததோ அப்போதே பல மொபைல் ஆப்கள் வந்துவிட்டன. குறிப்பாக வாட்ஸ் அப், டெலிகிராம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் போன்ற சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில், செல்போன் நெட்வொர்க் மூலம் இண்டர்நெட் சேவை இல்லையென்றாலும் அல்லது சிம் கார்டே இல்லையென்றாலும் WiFi பயன்படுத்தி வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு இல்லாமல் வைஃபை இணைப்பை மட்டும் நம்பி அல்லது சிம் கார்டை அகற்றிவிட்டு வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற ஆப்களை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் இதற்கு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டுகளை அகற்றினால் டெலிகிராம், வாட்ஸ் அப் போன்ற ஆப்கள் வேலை செய்யாது என மத்திய தொலைதொடர்பு துறை அறிவித்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!