1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (12:54 IST)

ஒன்ப்ளஸ்க்கு போட்டியாக இறங்கிய Motorola Edge 50 Pro 5G! – சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

Motorola Edge 50 Pro 5G
இந்த மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வரும் நிலையில் மோட்டோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள Motorola Edge 50 Pro 5G வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்தில் அடுத்தடுத்து பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன.

நேற்று ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் OnePlus Nord CE4 5G விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது வரும் ஏப்ரல் 9ம் தேதியில் மோட்டோரொலா நிறுவனத்தின் புதிய Motorola Edge 50 Pro 5G இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
 • 6.7 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளே, 144 Hz ரெப்ரெஷ் ரேட்
 • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 Gen3 சிப்செட்
 • 2.63 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
 • ஆண்ட்ராய்டு 14 OS
 • 8 ஜிபி / 12 ஜிபி RAM
 • 256 ஜிபி இண்டெர்னல் மெமரி (எக்ஸ்டர்னல் மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை)
 • 50 MP + 13 MP + 10 MP ப்ரைமரி ட்ரிபிள் கேமரா
 • 50 MP முன்பக்க செல்பி கேமரா
 • 4500 mAh பேட்டரி
 • 68W ஃபாஸ்ட் சார்ஜிங்
 • 50W வயர்லெஸ் சார்ஜிங்
 • 10 W ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங்
 
இந்த Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போனில் எஃப் எம் ரேடியோ, ஹெட்போன் ஜாக் கிடையாது. யுஎஸ்பி-சி யிலிருந்து ஹெட்போன் ஜாக் கன்வெர்டர் பயன்படுத்தி ஹெட்போனை பயன்படுத்தலாம். அல்லது வயர்லெஸ் ஹெட்போனை பயன்படுத்தலாம்.
இந்த Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போன் Black Beauty, Luxe Lavender, Moonlight Pearl ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.35,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 9 முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் அதிகாரப்பூர்வ விற்பனையை தொடங்க உள்ளது.

Edit by Prasanth.K