'கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9,746 பேருக்கு கொரோனா பாதிப்பு'
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9,746 பேருக்கு கொரோனா பாதிப்பு'
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தின் அளவே இருந்த நிலையில் தற்போது தமிழகத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தினமும் 4,000 முதல் 5,000 பேர் வரை மட்டுமே கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கர்நாடகாவில் மிக அதிகரித்து வருகிறது
சற்று முன் வெளியான தகவலின்படி கர்நாடகத்தில் கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 9,746 பேருக்கு கோரணா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,89,232 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 128 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது