வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (20:48 IST)

கேமரா மட்டும் 1 இன்ச்.. அதிரடி சிறப்பம்சங்களுடன்! – வெளியாகிறது Vivo X90 Pro!

Vivo X90 Pro
பிரபலமான விவோ நிறுவனம் தனது புதிய Vivo X90 Pro ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் பிரபலமாக உள்ள விவோ நிறுவனம் தனது ப்ராண்ட் நியூ Vivo X90 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. ரேம், கேமரா குவாலிட்டி என அனைத்திலும் பல ப்ளஸ்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vivo X90 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9200 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13, ஃபன் டச் ஓஎஸ் 13
  • Zeiss 1 இன்ச் மெய்ன் கேமரா, 50 எம்.பி + 50 எம்.பி + 12 எம்.பி அல்ட்ரா வைட் ட்ரிப்பிள் கேமரா
  • 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 4870 mAh பேட்டரி, 120 W ஃபாஸ்ட் சார்ஜ்

இந்த Vivo X90 Pro ஸ்மார்ட்போன் மே 5ம் தேதி விற்பனைக்கு வர உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரேம் + இண்டெர்னல் மெமரியை பொறுத்து ரூ.76,999ல் இருந்து தொடங்குகிறது.

Edit by Prasanth.K