தொலைந்து போன இந்திய விண்கலம் நிலைவை சுற்றி வருகிறது: நாசா தகவல்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 மார்ச் 2017 (19:16 IST)
2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. 

 

 
இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி முதல் சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அந்த விண்கலம் தொலைந்து விட்டதாக கருதியது.
 
இந்நிலையில் தற்போது சந்திராயன்-1 விண்கலம் தொலைந்து போகவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயன்-1 விண்கலம் சந்திர மேற்பரப்புக்கு 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விதிக்கப்பட்ட சுற்றுப்பாதையை கடந்து வேறு சுற்றுப் பாதையில் விண்கலம் சுற்றினால் அதனுடன் தொடர்பு கொள்வது இயலாமல் போகலாம். இஸ்ரோ சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பை இழந்தத்தற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :