வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (08:40 IST)

பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?

Green apple
உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதி ஆப்பிள் முக்கியமானது. தற்போது சந்தைகளில் சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் கிடைக்கும் நிலையில் எதை யார் சாப்பிடலாம் என அறிவோம்.


  • பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களிலும் புரதம், விட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
  • சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது.
  • ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க சிவப்பு ஆப்பிள்கள் சிறப்பானவை.
  • பச்சை ஆப்பிளில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது.
  • பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களுமே செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது.
  • பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட கால்சியம் சத்து கூடுதலாக இருப்பதால் எலும்பிற்கு வலு அளிக்கிறது.
  • உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு புளிப்பு சுவை கொண்ட பச்சை ஆப்பிள் சிறந்தது.