ஒழுங்காக 20 வினாடி கையை கழுவுங்க! – டூடுல் வெளியிட்ட கூகிள்!
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கையை கழுவுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பேசியவரின் டூடுலை கூகிள் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் முக்கியமாக அனைத்து மருத்துவ நிபுணர்களும் குறிப்பிடும் விஷயம் கைகளை கழுவுதல். ஆல்கஹால் உள்ள கைக்கழுவும் திரவத்தால் கையை 20 வினாடிகள் கழுவுவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அல்கஹால் கலந்த சோப்புகளை பயன்படுத்தி கைகளை கழுவுவதால் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து காக்கலாம் என்பதையும், மேலும் பல்வேறு பயன்களையும் உலகுக்கு சொன்னவர் ஹங்கேரியை சேர்ந்த டாக்டர் இங்ஙாஸ் செம்மல்வெய்ஸ். அவரது உருவத்துடன் வெளியாகியுள்ள கூகிள் டூடுல் 20 வினாடிகள் கையை கழுவ வலியுறுத்துவதாக உள்ளது.
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கூகிளின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.