இனிமேல் இவங்களுக்கு எல்லாம் சிலிண்டர் கிடையாது.. ஏற்கனவே வாங்கியிருந்தால் திருப்பி ஒப்படையுங்கள்: மத்திய அரசு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வைத்துள்ள தனிநபர்கள், புதிய எல்பிஜி இணைப்பை பெற முடியாது. மேலும், ஏற்கனவே வைத்துள்ள கூடுதல் எல்பிஜி இணைப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், சிலிண்டர் மறு நிரப்புதல் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது; இதில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. தற்போது அந்த பாதை முடங்கியுள்ளதால், உள்நாட்டு நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்து, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக இணைச்செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், வணிக ரீதியான பயன்பாட்டாளர்கள் சாத்தியமான இடங்களில் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்பிற்கு மாறும்படி அரசு வலியுறுத்தியுள்ளது.
Edited by Siva