பேஸ்புக் தில்லாலங்கடி வேலை செய்கிறதா ...? மக்கள் 'டன் கணக்கில்’ குற்றச்சாட்டு...

facebook
Last Updated: வியாழன், 20 டிசம்பர் 2018 (18:28 IST)
பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது நண்பர்கள் ஆகியோரது விவரங்களை அமேசான், மைக்ரோ சாப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்பாடிஃபை , மைந்தரா, உள்ளிட்ட 150 நிறுவனங்களுக்கு உரிய அனுமதி இன்றி வழங்கி இருப்பதாக பேஸ்புக் மீது பல்வேறு குற்றசாட்டு எழுந்தது.
ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தலைவர் மாரர்க் ஜுகர்பெர்க்குக்கு  எதிராக அந்நிறுவனப்  பங்குதாரர்களே போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் தற்போது மேலும் சிக்கல் உண்டாக்கும் விதத்தில் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களீன் விவரங்கள் பல நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வலுவான புகார்   எழுந்துள்ளது.

ஆனால் பேஸ்புக் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் பிரிவு துணைத்தலைவர் ஜம் ஆர்ச்சிபொங் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து அவர் கூறியுள்ளதாவது :
 
’மேலும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ’ரைட் அக்சஸ் ’எனும் வழிமுறைகளை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் , இந்த அக்சஸ் வழங்கினால் மட்டுமே பயனாளர்கள் தங்களது நண்பர்களுக்கு  மெசேஜ்கள் அனுப்ப முடியும். இதேபோன்று ’ரீட் அக்சஸ் ’வழங்கினால் மட்டும்தான் பயனாளர்கள் மேசேஜ்களைப் (குறுச்செய்திகள் ) படிக்க முடியும். இத்துடன் 'டெலி அக்சஸ்' கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் பேஸ்புக்கில் மெசேஜ்களை  அழித்ததும் அவை பேஸ்புக்கிலிருந்தும் அழிக்கப்பட்டு விடும் . எந்த ஒரு ஒப்பந்த நிறுவனமோ, செயலியோ, வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களது விவரங்களை எடுக்க முடியாது .’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர். இதில் மேலும் படிக்கவும் :