வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (15:19 IST)

கூகுள் செய்த வேலை இது ! லேட்டஸ்ட் திருட்டு இப்படித்தான் நடக்குது..

சென்னையில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பணக்கார வீடுகளில் கொள்ளையடித்து திருடர்களை போலீஸார் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடி வந்தனர்.
இந்த திருடர்கள் கூகுள் மேப் உதவியுடன் பல திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது போலீஸாருக்கு தெரிந்ததையடுத்து  2பேர் ஆந்திராவில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் அப்பொல்லொ மருத்துவரின் வீடிலும்,தேனாம்பேட்டையில் அரசு அதிகாரி வீட்டிலும், தி.நகரில் ஒருவரின் வீட்டில் என்று தொடர்ச்சியாக பல திருட்டுகள் நடந்த வந்த வண்ணம் இருந்தன.
 
இந்நிலையில் போலீஸார் அவர்களிடம் விசாரித்த போது :
 
சில மாதங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடும் பொது வீட்டில் அனவரும் இருந்தையும்  ஒப்புகொண்டுள்ளனர்.
 
சென்னையைப் போன்றே ஆந்திராவிலும் பலமுறை  திருட்டு நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி ஐதராபாத் போலீஸார் சத்ய ரெட்டி என்பவனை பிடித்து விசாரித்தனர். அவனிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்ததுடன் அவனது கூட்டாளிகளையும், கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர். இது பற்றி அறிந்த சென்னை காவல் துறையினர் நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
 
அதன்பின்னர் சத்திய ரெட்டி  போலீசாரிடம் கூறியதாவது:
 
கொள்ளையடுக்க போகும் முன் வீடு யாருடையது  என முன்பே நோட்டமிட்டு கண்காணித்த பின் , கூகுள் மேப் மூலம் தெருவின்  வடிவமைப்பு, சொகுசு வீடுகள் அமைப்பு போன்றவற்றை தெரிந்து கொண்டு அவற்றில் எப்படி செல்வது எப்படி வெளியேறுவது போன்றவற்றை ஜூம்  தெரிந்துகொள்வான். அதன்பின் உள்ளே அவன்நுழைந்து கொள்ளையடித்த பொருட்களை எங்களிடம் தருவான்.
 
கொள்ளையடிக்க பெரும்பாலும் இரவில் தான் செல்வோம் அப்போது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொடிருக்கும் போது திருடிவிட்டு சென்றுவிடுவோம்.இவ்வாறு கூறியுள்ளன்ர்.போலீஸார்  அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.