வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (18:15 IST)

பட்ஜெட் ஸ்மார்ட்போன்னா நாங்கதான்..! சொல்லி அடிக்கும் Redmi A3! – சிறப்பம்சங்கள் என்ன?

Redmi A3
இந்தியாவில் பல்வேறு மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஷாவ்மி நிறுவனம் தனது புதிய Redmi A3 மாடலை இந்தியாவில் அறிமுக செய்துள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது. அதனால் பெரும்பான்மையான அடிப்படை ஸ்மார்ட்போன் வசதிகளுடன் கூடிய புதிய Redmi A3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளனர்.

Redmi A3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.71 இன்ச் ஐபிஎஸ் ஸ்க்ரீன்
  • மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட்
  • ஆக்டாகோர் பிராசாஸர்
  • ஆண்ட்ராய்டு 13
  • 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி RAM + RAM Boost
  • 64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
  • 8 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
  • 5 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 10W பேட்டரி சார்ஜிங்

இந்த Redmi A3 ஸ்மார்ட்போன் ஓலிவ் க்ரீன், மிட்நைட் ப்ளாக், லேக் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Redmi A3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.7,299 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.8,299 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.9,299 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K