திங்கள், 4 மார்ச் 2024
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (15:47 IST)

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Moto G04! – சிறப்பம்சங்கள் என்னென்ன?

Moto G04
பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டோ தனது புதிய Moto G04 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு வகையான சிறப்பம்சங்களும் பல மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மோட்டோ நிறுவனமும் பட்ஜெட் விலை முதல் எலைட் வரை பல விலைகளில், சிறப்பம்சங்களில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தனது புதிய Moto G04 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

Moto G04 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
 • 6.56 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே
 • யுனிசாக் டி606 சிப்செட், ஆக்டாகோர் ப்ராசஸர்
 • ஆண்ட்ராய்டு 14
 • 4 ஜிபி / 8 ஜிபி ரேம் (ரேம் பூஸ்ட் வசதியுடன்)
 • 64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
 • 16 எம்பி + AI ப்ரைமரி டூவல் கேமரா
 • 5 எம்பி முன்பக்க கேமரா
 • 5000 mAh பேட்டரி, 15W சார்ஜிங் சப்போர்ட்

இந்த Moto G04 ஸ்மார்ட்போன் கான்கார்ட் ப்ளாக், சீ க்ரீன், சாடின் ப்ளூ, சன்ரைஸ் ஆரஞ்சு உள்ளிட்ட 4 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Moto G04 ஸ்மார்ட்போனுடன் ஹெட்செட், சார்ஜர், டைப் சி கேபிளும் வழங்கப்படுகிறது. இந்த Moto G04 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15ம் தேதியன்று இந்தியாவில் வெளியாகிறது.

Edit by Prasanth.K