வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (14:09 IST)

ஒரே ரேட் ஓஹோனு ஆஃபர்: ரூ.399-க்கு எவ்வளவு டேட்டா தெரியுமா?

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.399 ரீசார்ஜ் சேவையில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்து அசத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, 
 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா வழங்கபப்ட்டது. 
 
ஆனால் இப்போது இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டேட்டாவை விட 2.21 ஜிபி டேட்டா அதிகம். அதேபோல், மாதத்திற்கு 237.54 ஜிபி டேட்டா கிடைக்கும்.
 
இதை தவிர முன்னர் அறிவித்தது போல அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பிரீபெயிட் பயனர்களுக்கான இந்த 2.21 ஜிபி கூடுதல் டேட்டா ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.