செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (14:42 IST)

பிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்!

பேஸ்புக்கில் பிளாக் செய்யப்பட்ட நபர்களுக்கு பிளாக் செய்தவர்களின் பக்கத்தை பார்க்க பக் ஒன்று வழிவகை செய்துள்ளது.

 
பேஸ்புக்கில் நமக்கு பிடிக்காதவர்கள் மற்றும் நம் பக்கத்தை யாரேனும் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் பிளாக் செய்து கொள்ளலாம். ஒருமுறை பிளாக் செய்தால் போதும் பிளாக் செய்யப்பட்டவர்கள் யாரும் நம் பக்கத்தையும் நாம் பதிவிடும் பதிவுகளையும் பார்க்க முடியாது.
 
ஆனால் தற்போது பயனர்கள் இந்த பிளாக் வசதி வேலை செய்யவில்லை என்று புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் ஒரு பக். இந்த பக் செய்த வேலையால் பிளாக் வசதி வேலை செய்யாமல் உள்ளது.
 
இதுகுறித்து பயனர் ஒருவருக்கு டுவிட்டர் பதில் அளித்த பேஸ்புக் நிறுவனம், பயனர்கள் எந்த பதிவை பார்க்கிறார்கள், அதில் என்ன செய்கிறார்கள் என்பது அசோசியேஷன் என்ற பெயரில் பாரீஸ் நகரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
 
அதில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த குளறுபடிக்கு காரணம். இதை விரைவில் சரி செய்துவிடுவேம் என்று தெரிவித்துள்ளது.