செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மே 2023 (13:33 IST)

வருகிறது ஆண்ட்ராய்டு 14! அப்டேட் இந்த போன்களுக்கு மட்டும்தான்! – முழு விவரம்!

Android 14
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் Android OS-ன் அடுத்த அப்டேட்டான Amdroid 14 வெர்சனுக்கான Beta Version வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் ஐபோன்களில் பிரத்யேக IOS என்னும் Operating System பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படும் Operating System ஆக Android உள்ளது.

தற்போது Android 13 வெர்சன் பல ஸ்மார்ட்போன்களிலும், சமீபமாகவெளியாகும் ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே Androidன் மேம்படுத்தப்பட்ட வடிவமான Android 14 ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்த Android 14 அறிமுகப்படுத்தும் முன்னர் ஒரு சில ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டும் இதை Beta Version ஆக அளித்து முன்னோட்டம் பார்க்கப்படுகிறது. அவ்வாறாக Android 14 beta version அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றின் பட்டியல் இதோ:
 
  • Google Pixel – 4a (5G), 5, 5a, 6, 6 Pro, 6a
  • Google Pixel – 7, 7 Pro, 7a, Fold,
  • iQOO 11, Lenovo tab extreme,
  • Nothing Phone 1, OnePlus 11,
  • OPPO Find N2, N2 Flip
  • Vivo X 90 Pro, Realme GT2 Pro,
  • Xiaomi – 13, 13 Pro, 12T
  • Tecno Camon 20 Series
 
Edit by Prasanth.K