1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (11:55 IST)

அந்தரங்கத்தில் ரகசியமாய் கண் வைக்கும் ப்ரவுசர்! – கூகிள் மீது வழக்கு!

கூகிள் இணையதளத்தை பயப்படுத்தும்போது பயனாளர்களின் ரகசிய தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் தொழில்நுட்ப உலகில் இணையதளத்தில் தேட பயனாளர்கள் அதிகம் உபயோகிப்பது கூகிள் க்ரோம் ப்ரவுசர்தான். மேலும் உலகம் முழுவதும் கூகிளின் ஆண்ட்ராய்டு செயலி புழக்கத்தில் இருப்பதால் கூகிள் அப்ளிகேசன்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. கூகிளில் தேடும்போது ரகசியமான மற்றும் அந்தரங்கமான விஷயங்களை தேட கூகிள் இக்னானிடோ மோட் என்னும் ஆப்ஷனை பரவலாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அப்படி பயன்படுத்தியும் கூட பயனாளர்களின் ஹிஸ்டரி மற்றும் ரகசிய தகவல்கள் திருடப்படுவதாகவும், அந்தரங்க சமாச்சாரங்களை கூகிள் கவனிப்பதாகவும் கலிபொர்னியாவின் சான் ஜோஸில் உள்ள ஃப்டரல் நீதிமன்றத்தில் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் புகார் அளித்துள்ளது. மேலும் கூகிளின் இந்த செயலுக்கு 5 பில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக கூகிள் நிறுவனம் அளிக்க வேண்டும்  என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கூகிள் நிறுவனம் ஒவ்வொரு முறை புதிய டேப்களை திறக்கும்போது அவை ஹிஸ்டரியில் பதிவாகலாம் என்றும், ஆனால் கூகிள் பயனாளர்களை கண்காணிப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது.