செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (15:08 IST)

மூடப்படுகிறதா பி.எஸ்.என்.எல்? 54,000 பணியாளர்கள் நீக்கம்

இந்திய டெலிகாமில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்ததில் இருந்தே மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
 
குறிப்பாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கடுமையான நிதி சிக்கலை சந்தித்து வருகிறது.  நாடு முழுவதும் உள்ள தனது 1.76 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55% வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 8% கூடிக்கொண்டே போகும். 
 
இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தங்களது 54,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் பணியிலிருந்து விலக்கப்பட உள்ளனர். அதேபோல் ரிட்டயர்மண்ட் வயதும், 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்குகிறது பி.எஸ்.என்.எல். தேர்தல் முடிந்தவுடன், பணியாளர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.