ரூ.1000 கோடி இருக்கு; பணத்த வாங்கிட்டு ஓட்டு போடுங்க: தங்க தமிழ்செல்வன் நூதன பிரச்சாரம்

Thanga Tamil Selvan
Last Modified புதன், 3 ஏப்ரல் 2019 (13:29 IST)
நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து போட்டியிடுகிறார் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்லவன். ஓபிஎஸ் தனது மகனை எப்படியேனும் வெற்றிபெற செய்ய வேண்டும் என குறியாக உள்ளார். 
 
இந்நிலையில், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பிரச்சாரத்தில் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, தேனி வேட்பாளருக்கு அரசியல் பக்குவமே இல்லை. ஓபிஎஸ் தன் மகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் நினைக்கிறார். அதற்கு ரூ.1000 கோடி வரை செலவு செய்ய ரெடியாக இருக்கிறார். 
அதனால் நான் என்ன கூறுகிறேன், அவங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க. ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போட்டுடுங்க. எங்களுடைய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம். அதனால் வெற்றி எங்களுக்கே. 
 
ஆனால், அதிமுகவினர் நிறைய இடங்களில் பணம் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதை தேர்தல் அதிகாரிகள், போலீஸார் கண்டுக்கொள்வதில்லை வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் தங்க தமிழ்செல்வன். 


இதில் மேலும் படிக்கவும் :