புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (13:03 IST)

பட வாய்ப்பிற்காக மோசமான காரியத்தை செய்ய சொன்ன தயாரிப்பாளர் ! பழி தீர்த்த கங்கனா!

சினிமாவுலகில் எந்த பின்புலமும் இன்றி திரைத்துறையில் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். காதல் , கிசு கிசு , சக நடிகர்களை விமர்சிப்பது என அவ்வப்போது பிரச்சனையில் சிக்கிக் கொள்வார் கங்கனா.
 

 
இந்நிலையில் தற்போது தான் நடிக்க வந்த புதிதில் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் குறித்து பேசிய கங்கனா, 
 
தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானியின் ஐ லவ் யூ பாஸ் என்கிற சாப்ட் போர்ன் படத்தின் போட்டோஷூட்டில் உள்ளாடை இல்லாமல் ஒரு துணியை சுற்றிக் கொண்டு வரச் சொன்னார்கள் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார். உள்ளாடை இல்லாதபோதிலும் கால் தெரியும்படி போஸ் கொடுக்குமாறு தன்னை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
லவ் யூ பாஸ் படத்திற்காக கங்கனா உள்ளாடை இல்லாமல் சாட்டின் ரோபுடன்(Satin Robe) போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 

 
கங்கனா குற்றம் சாட்டியதற்கு  சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி கொந்தளித்துள்ளார் " தேவையில்லாமல் கங்கனா என் படம் பற்றி பேசுகிறார். பதிலுக்கு நான் பேச ஆரம்பித்தால் அவரை பற்றி நிறைய விஷயம் வெளியே வரும் என்று பங்கஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.