வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (21:23 IST)

ஐபிஎல்-2021; சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்கான நிர்ணயித்துள்ளது ஐதராபாத் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 44வது போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 134  ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 135 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.

சென்னை அணியினர் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா, இலக்கை எட்டி ஜெயிப்பார்களா என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன்  காத்திருக்கின்றனர்.