திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (22:58 IST)

’’சென்னை கிங்க்ஸ்’’ அணியில் பிரபல வீரர் விலகல்..அவருக்கு பதில் இவரா???

ஐபிஎல்.2021 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இம்முறை சென்னை, கொல்கத்தா, மும்பை,அகமதாபாத் உள்ளிட்ட  இடங்களில் போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் முதல் ஐபிஎல் போட்டி மும்பைடில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான அனைத்து வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்ட் இம்முறை ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்அவர்திரேலியா அடுத்த 12 மாதங்களில் விளையாடவுள்ளதால் அதில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜோஷ் ஹேசல்வுட்டுக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெகஸ் ஹேல்ஸை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது