திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:07 IST)

பெங்களூர் அணி வெளியேற்றம்: விராட் கோலி நெகிழ்ச்சி

நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியுற்று எலிமினேட் ஆன நிலையில் இதுகுறித்து விராட் கோலி நெகிழ்ச்சியுடன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் முதலில் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காண நிர்ணயித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், பெங்களூர் அணி கேப்டன் கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த முடிவு எங்கள் அணிக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் எங்கள் அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்புடன் விளையாடினர். ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.