பயிற்சிக்கே இந்த அலப்பறையா? கெத்து காட்டும் சிஎஸ்கே ரசிகர்கள்

dhoni
பயிற்சிக்கே இந்த அலப்பறையா?
Last Modified செவ்வாய், 3 மார்ச் 2020 (08:29 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு வரும் 29 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தல தோனி சென்னைக்கு வந்துள்ளார் என்பதும் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் முன்பு சிஎஸ்கே ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை வீரர்கள் பேருந்துகளில் மைதானத்திற்கு செல்லும்போது அவர்கள் செல்லும் பேருந்து கூடவே சிஎஸ்கே ரசிகர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்பட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதை ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்
இது போதாதென்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தல தோனி மைதானத்தில் களமிறங்க உள்ளதை அடுத்து அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பயிற்சி ஆட்டத்தில் இந்த அலப்பறை என்றால் தோனி உண்மையாக களத்தில் இறங்கும்போது சிஎஸ்கே ரசிகர்கள் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :