திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மே 2022 (07:57 IST)

கட்டாய வெற்றிக்கான போராட்டம்: சென்னை vs மும்பை!

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே 7.30 மணிக்கு மும்பையில் போட்டி நடைபெறவுள்ளது. 

 
ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. சென்னை அணி எஞ்டியுள்ள போட்டிகளில் அதிகபட்ச ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது. 
 
இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே 7.30 மணிக்கு மும்பையில் போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் இருந்து சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் கட்டாயமாக மும்பை அணியை வீழ்த்த வேண்டும். 
 
இதனிடையே சென்னை அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சென்னை அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை அணி வெற்றி பெற்றால் சென்னை அணியை போட்டியை விட்டு வெள்யேற்றி விடலாம், ஆனால் சென்னை வெற்றி பெற்றால் 9 வது இடத்தில் இருந்து புள்ளிப்பட்டியலில் நேராக 6 வது இடத்திற்கு முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது.