Daily Horoscope
✕

தோல்விக்கு பின் கோஹ்லியின் உருக்கமான பேச்சு: வைரலாகும் வீடியோ!

Written By siva
Updated: சனி, 7 நவம்பர் 2020 (18:20 IST)
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான முக்கியமான எலிமினாட்டர் போட்டியில் நூலிழையில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே பெங்களூரு அடித்து இருந்தாலும் அந்த ரன்களை அடிக்க ஹைதராபாத் அணி 19.4 ஓவர்கள் வரை தேவைப்பட்டது 
 
பெங்களூர் அணியின் அசத்தலான பந்து வீச்சை கொண்டிருந்தும் கடைசி ஓவரில் கோட்டை விட்டதால் பெங்களூரு அணி தோற்று விட்டது. இந்த நிலையில் தோல்வியடைந்த பின்னர் வீரர்களிடம் அணித்தலைவர் விராட் கோலி உருக்கமாக பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
அதில் கோஹ்லி கூறியதாவது ’இந்த சீசனில் நாம் சரியான வகையில் தான் செயல்பட்டு ஒரே அணியாக இணைந்து விளையாடினோம். இதற்கு முந்தைய சீசனை விட இந்த சீசனில் நாம் நன்றாக தான் விளையாடினோம். நம்முடைய அணுகுமுறையும் பாசிட்டிவ் ஆக இருந்தது
 
இந்த எட்டு வார காலம் குடும்பத்தை மறந்து ஒரு அணியாக அனைவரும் இணைந்து பயணித்தோம் குறிப்பாக சிராஜ், படிக்கல் ஆகிய அற்புதமான வீரர்கள் நமக்கு கிடைத்துள்ளனர். பயிற்சியாளர்கள் மற்றும் அணிய நிர்வாக ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றி
 
நமது ரசிகர்கள் எலுமினேட்டர் போட்டியை கடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள் ஆனால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற ஒரு மனக்குறை மட்டும் உள்ளது. இருப்பினும் நேர்மறை அனுபவங்களை எடுத்துக் கொண்டு அடுத்த சீசனில் அதனை சரி செய்வோம் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments