மீண்டும் கொல்கத்தா அணியில் நரேன் – டாஸ் வென்ற டெல்லி பவுலிங்!
கொல்கத்தா அணியில் மீண்டும் அந்த அணியின் நட்சத்திர பவுலர் சுனில் நரேன் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 11 ஆம் தேதி நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் சுனில் நரேன் பந்துகளை வீசுவதற்கு பதிலாக காயம்படுத்தும் வகையில் எறிவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்த்து சுனில் நரேனுக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில போட்டிகளாக சுனில் நரேன் பங்கெடுக்கவில்லை. இதையடுத்து இன்று டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி 19 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது