14 வயதில் கர்ப்பம்… பிறந்த குழந்தையை பிரீசரில் வைத்து கொன்ற கொடூரம்!

Last Updated: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:00 IST)

ரஷ்யாவில் 14 வயதில் கர்ப்பமான சிறுமி பிறந்த குழந்தையை பிரிஸரில் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வெர்க்-துலா என்ற கிராமத்தில்
வசித்து வந்துள்ளார் அந்த 14 வயது சிறுமி. அவர் உடல் நாளுக்கு நாள் பெருக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் மகள் எடை கூடிக்கொண்டே போவதாக அவரின் தாயார் தவறாக நினைத்துள்ளார். ஆனால் அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.

மேலும் வீட்டிலேயே பெற்றோருக்கு தெரியாமல் தானே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பின்னர் இதுபற்றி தெரிந்தால் பெற்றோர் கொன்றே விடுவார்கள் என்பதால் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து பிரிஸரினுள் வைத்துள்ளார். ஆனால் பிரசவம் ஆனதால் அவர் உடலில் இருந்து ரத்தப்போக்கு அதிகமாகிக் கொண்டே சென்றுள்ளது.

இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார். அப்போது ஆம்புலன்ஸில் இருந்த துணை மருத்துவர்களிடம் தான் கர்ப்பமாக இருந்ததையும், குழந்தை பெற்றெடுத்ததையும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து பிரிஸரில் சென்று பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது. சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் 16 வயது சிறுவன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.இதில் மேலும் படிக்கவும் :