புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (17:59 IST)

அமித் மிஸ்ராவுக்கு பதில் இளம் வீரர் – டெல்லி கேபிடல்ஸ் அறிவிப்பு!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா காயமடைந்து தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ரா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விரலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் சில நாட்களில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இதையடுத்து இப்போது அவருக்கு பதிலாக மாற்று வீரராக கர்நாடகவைச் சேர்ந்த பிரவின் துபே டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.