செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (20:09 IST)

விவேக் ஓப்ராய் வீட்டில் சோதனை – போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மச்சான் தலைமறைவு!

பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராயின் பெங்களூர் இல்லத்தில் போதைப் பொருள் தடுப்புப் போலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் விவேகம் படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானார். இந்நிலையில் அவரின் பெங்களூர் இல்லத்தில் போலிஸார் போதைப் பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர். அவரின் மனைவி பிரியாவின் சகோதரரான ஆதித்யா அல்வா என்பவர் இது சம்மந்தமான வழக்கில் சிக்க இப்போது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவமானது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.