Daily Horoscope
✕

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின் ஐபிஎல் இறுதி போட்டிதான்! பொல்லார்ட் கருத்து!

Updated: செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:42 IST)
இன்று நடக்க உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ள நிலையில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. குவாலிபையர் 1 ல் மோசமாக தோற்ற டெல்லி அணி மும்பை அணி பழிவாங்க காத்திருக்கிறது. ஆனால் மும்பை அணியோ 5 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் மும்பை அணியின் துணை கேப்டன் கைரன் பொல்லார்ட் ‘விளையாட்டின் மற்றொரு பெயர் அழுத்தம். ஒரு இறுதிப் போட்டியில் எல்லோரும் அழுத்தத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் போட்டியின் முடிவில் இறுதிப் போட்டியை ஒரு சாதாரண போட்டியாக எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டி தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய விஷயம்.’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

சானியா மிர்சா சாதனையை முறியடித்த கோவை 17 வயது இளம் பெண்.. டென்னிஸ் உலகில் ஒரு மகுடம்...

4வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. மே.இ.தீவின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரம்...

மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. ஆனால் பாதி விலைக்கு தான்...

கால்பந்து போட்டி போல் கிரிக்கெட்டில் தரம் பிரிக்க வேண்டும்: கவாஸ்கர் யோசனை...

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments