1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL-2020; Bangalore won the toss and elected to bat

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு..

Bangalore won the toss
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் டிஆர்பி ரேட்டிங் கூடுகிறது.

இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும்  ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி, கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் 15 போட்டிகளில் சென்னை அணியும்,  பெங்களூர் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு காணப்படவில்லை .

சென்னை அணிக்கு கடும் சவால் கொடுக்கப் போகிற இந்த போட்டியில் தோனி எப்படி தன் அணியின் மீதான விமர்சனத்திற்கு என்ன சொல்லப்போகிறார் என்பது இன்று தெரியும்.
 
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2020; பஞ்சாப் அணிக்கு 160 வெற்றி இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா